/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் முகமூடி கொள்ளையன்
/
அருப்புக்கோட்டையில் முகமூடி கொள்ளையன்
ADDED : நவ 29, 2024 05:20 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் முகமூடி கொள்ளையன் திருட வந்தது சி.சி.டி.வி., கேமராவில் பதிவானதை போலீசார் விசாரிக்கின்றனர். அருப்புக்கோட்டை மதுரை - தூத்துக்குடி நான்கு வழி சாலை அருகே காந்திநகர் உள்ளது. இதன் அருகே உள்ள மேம்பாலம் ஒட்டி சர்வீஸ் ரோடு உள்ளது. இந்த பகுதியில் புறநகர் பகுதிகள் உள்ளன.
நேற்று அதிகாலையில் இந்த பகுதியில் உள்ள கே.டி.எல். கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டு மாடியில் ஏறி ஒரு முகமூடி கொள்ளையன் வந்ததை அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி இருந்தது.
கொள்ளையன் தான் பதிவான கேமிராவை திருடி சென்று விட்டான். அந்த வீட்டில் இருந்த டி.வி.ஆர்., ல் கொள்ளையன் முகமுடி அணிந்து வந்தது பதிவாகி இருந்தது. பதிவை வைத்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.