நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி எஸ். கடமங்குளத்தைச் சேர்ந்த மலர்மன்னன் 55, கொத்தனார். நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு இரவு டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை) ஊருக்கு சென்றார்.
நரிக்குடி ரோட்டில் ஊர் அருகே உள்ள வளைவில் திரும்பிய போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மலர்மன்னன் இறந்தார். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

