/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநகராட்சி, நகராட்சிகளில் மீண்டும் தேவை மாஸ் கிளீனிங்! தேங்கும் குப்பையால் நிலவும் சுகாதாரக்கேடு
/
மாநகராட்சி, நகராட்சிகளில் மீண்டும் தேவை மாஸ் கிளீனிங்! தேங்கும் குப்பையால் நிலவும் சுகாதாரக்கேடு
மாநகராட்சி, நகராட்சிகளில் மீண்டும் தேவை மாஸ் கிளீனிங்! தேங்கும் குப்பையால் நிலவும் சுகாதாரக்கேடு
மாநகராட்சி, நகராட்சிகளில் மீண்டும் தேவை மாஸ் கிளீனிங்! தேங்கும் குப்பையால் நிலவும் சுகாதாரக்கேடு
ADDED : ஜன 30, 2025 10:38 PM

சிவகாசி : மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊரக உள்ளாட்சிகளில் குவியும் குப்பையால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க உள்ளாட்சி நிர்வாகங்கள்சுகாதாரத்துறையுடன் இணைந்து மீண்டும் மாஸ் கிளீனிங்க் பணியை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார் ஆகிய நகராட்சிகள் உள்ளன. இந்த நகர் பகுதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வாரம் ஒருமுறை மாஸ் கிளீனிங் என்ற பணி நடைபெற்று வந்தது.
இத்திட்டத்தின்படி மாநகராட்சி, நகராட்சியில் ஏதாவது ஒரு வார்டினை தேர்வு செய்து அங்குள்ள பிரச்னைகள் சரி செய்யப்படும் தெருக்களில் குப்பை அகற்றுதல், ரோடு சுத்தம் செய்தல், வாறுகால் துார்வாறுதல் உள்ளிட்ட பல்வேறு துாய்மைப் பணிகள் நடைபெறும்.
நகரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துாய்மை பணியாளர்கள் இதில் பங்கு பெறுவர். இதே போல் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு வார்டினை தேர்வு செய்து இந்த பணியினை மேற்கொள்வர். இந்த பணிகள் நடைபெற்றதால் ஒவ்வொரு நகரும் சுகாதாரமான நிலைக்கு மாறியது.
இதேபோல் சுழற்சி முறையில் அடுத்தடுத்த வாரங்களில் பணிகள் நடைபெறும். ஆனால் தற்போது மாஸ் கிளீனிங் நடைபெறாமல் நகரங்களில் குப்பைகள் முழுமையாக அகற்றப்படுவதில்லை. வாறுகால் துார்வாரப்படுவதில்லை. இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்பணிகள் நடைபெறாததால் சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது. மாவட்டத்திலுள்ள நகர்களில் இந்த பணிகள் நடைபெறாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த மாஸ் கிளீனிங் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தெருக்களில் குப்பை அகற்றப்படுதல், ரோடு சுத்தம் செய்தல், வாறுகால் துார்வாறுதல் உள்ளிட்ட துாய்மைப் பணிகள் நடைபெறும்.