/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீப்பெட்டி ஆலை உரிமையாளர் கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
/
தீப்பெட்டி ஆலை உரிமையாளர் கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தீப்பெட்டி ஆலை உரிமையாளர் கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தீப்பெட்டி ஆலை உரிமையாளர் கொலை தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஏப் 16, 2025 08:41 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் பொது இடத்தில் மது அருந்துவதை கண்டித்த தீப்பெட்டி ஆலை உரிமையாளர் சிவகுமாரை 50,வெட்டி கொலை செய்த வழக்கில் விறகு வெட்டும் தொழிலாளி மாரிமுத்துவிற்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது அண்ணன் குமரன் 56, இவர்கள் இருவரும் தீப்பெட்டி ஆலை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி மாரிமுத்து 27, என்பவர் இரவு நேரங்களில் பொது இடத்தில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனை அவ்வப்போது சிவக்குமார் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் 2020 செப். 17 இரவு காளியம்மன் கோயில் தெரு காலியிடத்தில் மாரிமுத்து மது அருந்துவதை அவர் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் அரிவாளால் சிவகுமாரை வெட்டி கொலை செய்தார்.
சாத்துார் டவுன் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் மாரிமுத்துவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.

