/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீ ரமண அகாடமியில் கணித கண்காட்சி
/
ஸ்ரீ ரமண அகாடமியில் கணித கண்காட்சி
ADDED : டிச 14, 2025 05:58 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ ரமண அகாடமி சி.பி.எஸ்.இ பள்ளியில் கணித கண்காட்சி நடந்தது.
பள்ளி ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் தலைமை வகித்தார். மாணவி அதிதி வரவேற்றார். மாணவி தான்யலட்சுமி பரதநாட்டியம் ஆடி கணிதக் குறிகளை காட்சிப்படுத்தினார்., மாணவி காவ்யா விளக்கம் அளித்தார்.
சாத்துார் எஸ்.ஆர் நாயுடு கல்லுாரி கணித பேரசிரியர்கள் சரவணகுமார், அபிராமி கண்காட்சியை துவக்கி வைத்து மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்த 200க்கும் மேற்பட்ட திட்ட வடிவமைப்புகளில் இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர் ஆல்வின் ஜோஸ்வா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை துணை முதல்வர் இந்திரா தலைமையில் ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, மணிகண்டன், முத்துமாரி, தீபா, பள்ளி நிர்வாக அலுவலர் ராமராஜ் செய்தனர்.

