/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் பல்கலையில் கணிதத்துறை கருத்தரங்கு
/
கலசலிங்கம் பல்கலையில் கணிதத்துறை கருத்தரங்கு
ADDED : ஜன 05, 2024 05:42 AM
ஸ்ரீவில்லிபுத்தூர : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் கணித துறை ஆராய்ச்சியாளர்கள் மாநாடு நடந்தது.
துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமை வகித்தார். பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் யக்ன நாராயணன் வரவேற்றார்.
துணைவேந்தர் நாராயணன், சென்னை கணித அறிவியல் கல்வி நிறுவன இயக்குனர் ரவீந்திரன், இந்திய சைபர் செக்யூரிட்டி ஆலோசகர் சக்சேனா, ஐ.ஐ.டி. பேராசிரியர் ஸ்ரீவஸ்தவா உட்பட பலர் கணித, கணினி ஆராய்ச்சி குறித்து பேசினர்.
மாநாடு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அறிவியல் விஞ்ஞானி தகுதி பெற்ற பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். கணிதத்துறை டீன் தீபலட்சுமி நன்றி கூறினார்.