/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகளை கண்டித்த ம.தி.மு.க., எம்.எல்.ஏ.,

ADDED : அக் 30, 2025 03:41 AM
சாத்துார்:  விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே நதிக்குடியில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின் முகாமில்  ஜாதி சான்றிதழ் கேட்டு வந்த பெண்ணிடம் முகாமில்  இருந்த அதிகாரிகள் மற்றொரு அலுவலரை சந்திக்கும் படி கூறியதையடுத்து சாத்துார் தொகுதி ம.தி.மு.க., எம்.எல்.ஏ., ரகுராமன் அதிகாரிகளை கண்டித்தார்.
முகாமில்  அவர் அதிகாரிகளிடம், '' நீங்கள் ஏற்கனவே அலுவலகத்தில் சரியாக வேலை செய்யாததால் தான் முதல்வர் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி வருகிறார்.
இங்கும் நீங்கள் அப்படியே உள்ளீர்கள். இந்தப் பெண்ணுக்கு ஏ.டி .டபுள்யு என்றால் தெரியுமா.
அங்கே போய் ஜாதி சான்று வாங்குங்கள் என்று  கூறுகிறீர்களே. எங்கு எந்த டேபிளில் எந்த அதிகாரி உள்ளார் என்று தெரியாமல் நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள் என்று கடிந்து கொண்டு உங்கள் தாசில்தாரை வரச் சொல்லுங்கள், என்றார்.
இவர் அதிகாரிகளை கடிந்து கொள்ளும் வீடியோ வலைதளங்களில்  பரவியது.