ADDED : செப் 23, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே செட்டியார்பட்டியில் ம.தி.மு.க., சார்பில் வைகோ பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.
மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்து தொடங்கினார். ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், அவைத்தலைவர் முருகதாஸ், ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால், பேரூராட்சி செயலாளர்கள் அய்யனப்பன், நாகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேல்முருகன் தலைமையில் கட்சியினர் செய்திருந்தனர்.