/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
என்.ஆர்.கே.ஆர்.,நகரில் மருத்துவ முகாம்
/
என்.ஆர்.கே.ஆர்.,நகரில் மருத்துவ முகாம்
ADDED : நவ 03, 2024 04:33 AM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி அருகே விஸ்வநத்தம் என்.ஆர்.கே.ஆர்., நகரில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் என்.ஆர்.கே.ஆர்., நகரில் குழந்தைகள், பெரியவர்கள் என 10 பேர் வரை இரு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர். அதே சமயத்தில் காய்ச்சல் முழுமையாக சரியாகததால் மீண்டும் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக என்.ஆர்.கே.ஆர்., நகரில் சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. இப்பகுதி மக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் குளோரினேசன், குப்பை அகற்றும் பணி, புகை மருந்து அடிக்கும் பணி, கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
மக்களுக்கு சுகாதாரக் கல்வி, டெங்கு காய்ச்சல் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சுந்தர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபத்திரன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.