/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் இன்று துவக்கம்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் இன்று துவக்கம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் இன்று துவக்கம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் இன்று துவக்கம்
ADDED : நவ 08, 2024 03:52 AM
விருதுநகர்; மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்றியம் வாரியாக இன்று முதல் டிச. 20 வரை நடக்கிறது.
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் துறை, பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இதில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவச்சான்றுடன் அடையாள அட்டை வழங்குதல் பணி நடக்கிறது.
விவரங்களுக்கு 04562- 252068 என்ற எண்ணில் மாற்றுத்திறனாளி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இன்று ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றியத்திற்கு ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியிலும், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு நவ. 15 மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சுழி ஒன்றியத்திற்கு நவ. 22 எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு நவ. 29ல் சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ராஜபாளையம் ஒன்றியத்தில் டிச. 6 எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சாத்தூர் ஒன்றியத்தில், டிச. 10 எட்வர்ட் நடுநிலைப்பள்ளியிலும், விருதுநகர் ஒன்றியத்தில் டிச. 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும், வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் டிச.12 வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நரிக்குடி ஒன்றியத்தில் டிச. 17 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், காரியாபட்டி ஒன்றியத்தில் டிச. 19 கல்குறிச்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், சிவகாசிக்கு டிச. 20ல் நகராட்சி ஏ.வி.டி உயர்நிலைப்பள்ளியிலும், மருத்துவ முகாம்கள் நடக்கிறது. இதில் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.