விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் காளிதாஸ் செய்திக்குறிப்பு: நாளை (ஆக. 2) நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சத்திரரெட்டியபட்டிஅரசு மேல்நிலைப்பள்ளியில் ஆக. 2 காைல 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கவுள்ளது.
நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பங்கேற்போருக்கு பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், என பல்துறை மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
இதில் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனைகள் கட்டணமின்றி செய்யப்படும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை, மாற்றத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே விருதுநகரை சேர்ந்த மக்கள் குறிப்பாக பதிவு பெற்ற, பெறாத தொழிலாளர்கள், நல வாரிய ஓய்வூதியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முகாமிற்கு வருவோர் ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும், என்றார்.