நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி எஸ்.பி.எம்., மருத்துவமனையில் டிரஸ்ட், மதுரை பாரதி மருத்துவமனை இணைந்து பெண்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் துவக்கி வைத்தார்.
அசோக்குமார் எஸ்.ஐ., முன்னிலை வகித்தார். நிறுவனர் அழகர்சாமி வரவேற்றார். டாக்டர்கள் ஹரிஷ், ரேணுகா தேவி, வாத்சல்யன் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
பேரூராட்சி துணைத் தலைவர் ரூபி, ஜனசக்தி பவுண்டேஷன் நிறுவனர் சிவக்குமார், கிரீன் பவுண்டேஷன் நிறுவனர் பொன் ராம் கலந்து கொண்டனர். பாரதி மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் தினேஷ் நன்றி கூறினார்.