ADDED : அக் 28, 2026 05:09 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ,பரிசோதனை முகாம் அரசு மருத்துவமனையில் நடந்தது.
தலைவர் முத்துச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் காளிராஜ், அருண், அமல்ராஜ், மார்பக புற்றுநோய் பரிசோதனை அவசியம் குறித்து பேசினர்.
பல்வேறு பெண்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். ரோட்டரி நிர்வாகிகள் வெங்கடாசலம், பெரியசாமி, சுப்புராம், செவிலியர்கள் அலமேலு மங்கை, பொன்முனி, மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
