நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஸ்வச் பாரத் சேவா திட்டத்தின் கீழ, ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இரத்த பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உட்பட பரிசோதனைகள் செய்யப்பட்டது. 82 நபர்கள் கலந்து கொண்டனர். பி.டி.ஓ., புகழேந்தி தலைமை வகித்தார். மருத்துவர் ஜெய சோபியா பால் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை திருச்சுழி வட்டார சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன், அசாருதீன் செய்தனர்.