/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனைகளில் சி.டி., எம்.ஆர்.ஐ., கட்டணங்களை ஆன்லைனில் வசூலிக்க வேண்டும் கட்டாயமாக்கும் மருத்துவ சேவைகள் கழகம்

ADDED : பிப் 17, 2025 01:09 AM
விருதுநகர்: அரசு மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., பரிசோதனை கட்டணங்கள் ஆன்லைனிலும், ரொக்கமாகவும் வசூலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஆன்லைனில் மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என மருத்துவ சேவைகள் கழகம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் சி.டி., ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் சி.டி., ஸ்கேன் எடுக்க ஒரு பகுதிக்கு ரூ.500, எம்.ஆர்.ஐ., ரூ. 2500 ரொக்கமாக வசூலிக்கப்படுகிறது. எம்.ஆர்.ஐ., பரிசோதனை மருத்துவக் காப்பீட்டு திட்டத்திலும் எடுக்கப்படுகிறது.
பரிசோதனை கட்டணங்களை ஆன்லைன், ஏ.டி.எம்., கார்டு, ரொக்கமாகவும் செலுத்தலாம் என மருத்துவ சேவைகள் கழகம் அறிவித்தது. அதன் பின் ஆன்லைனில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டது.
நோயாளிகளின் நலன் கருதி ரொக்கமாகவும் கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து கோரிக்கை எழுந்ததால் ரொக்கமாகவும் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஆன்லைன், ஏ.டி.எம்., கார்டு மூலம் மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என மருத்துவ சேவைகள் கழகம் அறிவித்து மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒவ்வொரு வாரமும் ஆன்லைன் கட்டணம் குறைவாக வசூலான மருத்துவமனைகளை மாவட்ட வாரியாக கணக்கெடுத்து அவர்களை சிவப்பு பட்டியலில் வைத்து மொத்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஊழியர்களும் ஆன்லைனில் மட்டுமே கட்டணங்களை வசூலிக்கின்றனர்.
இதனால் நோயாளிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே தினமும் பிரச்னை ஏற்படுகிறது. எனவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாறுவது அவசியமாக இருந்தாலும், நோயாளிகளின் நலன் கருதி பரிசோதனை கட்டணங்களை ரொக்கமாகவும் வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.