/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை ரத வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
/
அருப்புக்கோட்டை ரத வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
அருப்புக்கோட்டை ரத வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
அருப்புக்கோட்டை ரத வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்
ADDED : டிச 27, 2024 04:35 AM

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரம் ரதவீதியில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு, தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதி ரத வீதியில் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை டிரான்ஸ்பார்மர் ஓரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதில் காலியான சிரிஞ்ச், மருந்து அட்டைகள், டப்பாக்கள், பஞ்சுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மருத்துவக் கழிவுகளை உரிய பாதுகாப்புடன் அப்புறப்படுத்த வேண்டும் என்பது மருத்துவ விதி. இதைவிடுத்து ரோடு ஓரங்களில் கொட்டி செல்வதை நகராட்சி சுகாதார பிரிவும் கண்டு கொள்வதுமில்லை. கண்டிப்பதும் இல்லை.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவக் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டுவது குற்றம்
ராஜமாணிக்கம், கமிஷனர் அருப்புக்கோட்டை நகராட்சி: மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் திறந்த வெளியிலேயே கொட்ட கூடாது.
தனியார் மருத்துவமனைகள் அதை பாதுகாப்பாக வைத்திருந்து அதற்கு என வரும் வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சொக்கலிங்கபுரம் ரத வீதியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டும் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடப்படும். இனி இது போன்று தவறுகள் நடக்காத வகையில் கண்காணிப்பு செய்யப்படும்.