/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மந்த கதியில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிறமடை ஓடை பணி
/
மந்த கதியில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிறமடை ஓடை பணி
மந்த கதியில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிறமடை ஓடை பணி
மந்த கதியில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் பிறமடை ஓடை பணி
ADDED : மே 16, 2025 02:50 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு சொந்தமான பிறமடை ஓடை நவீனப்படுத்தும் பணி மந்தகதியில் நடக்கிறது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. திருச்சுழி ரோட்டில் 1.89 ஏக்கரில் கோயிலுக்கு சொந்தமான பிறமடை ஓடை உள்ளது. இதை பராமரிப்புச் செய்யாமல் விட்டதால் முட்புதர்கள் சூழ்ந்தும், கழிவுநீர் விடப்பட்டும் சுகாதார கேடாக இருந்தது. மேலும் ஓடையின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது.
ஓடையை தூர்வாரி நவீனப்படுத்தி, புதர்களை அப்புறப்படுத்தி மழை நீர் வரத்து கால்வாய் அமைத்து சுற்றிலும் மின்விளக்குகள் பொருத்தவும் நடைமேடை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பணியை நகராட்சி மூலம் செய்வதற்கு 50 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள் நடந்தது. பணிகள் பல மாதங்களாக மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால் ஓடையில் மீண்டும் கழிவுநீர் சேர்ந்தும், செடிகள், கொடிகள் வளர்ந்தும் உள்ளது. பல நாட்கள் பணிகளே நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் நகராட்சி மெத்தனம் காட்டுகிறது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விரைவில் பணிகளை முடிக்க நகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும்.