நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் விற்பனை, வணிகத்துறை, பதப்படுத்தப்பட்ட உணவுபொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் விவசாயிகள் - வணிகர் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில் துாத்துக்குடியைச் சேர்ந்த ஏற்றுமதியாளரான திவாகர், ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் பயிரை தரம் பிரித்தல் குறித்து பேசினார்.
வயலுக்கு சென்று நித்தியக்கல்யாணி மாதிரிகள் சேகரித்து ஏற்றுமதியாளர்களிடம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வேளாண் வணிக துணை இயக்குனர் ரமேஷ் குமார், விருதுநகர் விற்பனைக் குழு செயலாளர் வேலுச்சாமி, வேளாண்மை அலுவலர்கள், தோட்டகலை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.