/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இளம் விஞ்ஞானிகள் உடன் சந்திப்பு
/
இளம் விஞ்ஞானிகள் உடன் சந்திப்பு
ADDED : ஜன 06, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியின் விண்வெளி சங்கமும், விருதுநகர் ரோட்காட் சங்கமும், குமரி இளம் ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் பேரவை இணைந்து இளம் விஞ்ஞானிகளுடன் ஒரு சந்திப்பு என்ற நிகழ்ச்சியை கல்லுாரி செயலாளர் தர்மராஜ் துவக்கி வைத்தார்.
இதில் பெங்களூரு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி, குழு இயக்குனர் இங்கர்சால், கல்லுாரி கல்விப்புல முதன்மையர் சுரேஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.
வேலைவாய்ப்பு பயிற்சித்தலைவர் ராமசாமி நன்றி கூறினார். நுாலகர் சிவகுமார் ஒருங்கிணைத்தார்.

