ADDED : ஆக 13, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் ரோட்டரி கிளப் ஆப் எலைட் சங்கம் சார்பில் ஆறு பள்ளிகளுக்கு இடையே மாணவர்களின் மெகா டேலன்ட் ஷோ நடத்தப்பட்டது. தொழிலபதிபர் பென்டகன் ஜவகஹர் துவக்கி வைத்தார். ஒவ்வொரு பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் வீதம் மொத்தம் 250 மாணவர்கள் பங்கேற்று தங்களது தனி திறமையை வெளிப்படுத்தினர்.
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஒருங்கிணைப்பாளராக முன்னாள் கவர்னர் முருகதாஸ், ரோட்டரி சங்க தலைவர் சிவகுமார், கணேஷ்குமார் செயல்பட்டனர். மேலும் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். நடுவர்களாக ஆரீப், சீமான், தனுஷ்மதி, வேணி, கவிதாபாண்டியன் செயல்பட்டனர். மேலும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
