/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
கலசலிங்கம் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : டிச 05, 2025 06:47 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலை, ஹைதராபாத் பை ஸ்கொயர் டெக்னாலஜி நிறுவனமும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொண்டனர்.
இதில் வேந்தர் ஸ்ரீதரன், பை ஸ்கொயர் டெக்னாலஜி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராஜு கையெழுத்திட்டனர்.
துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், தொழிற்சாலை உறவு இயக்குனர் முகிலன் பேசினர்.
தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாச ராஜு கூறுகையில், இந்த புரிந்து ணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் எம்பெட் சிஸ்டத்தில் பயிற்சி பெறுவார்கள். மேலும் அதனைச் சார்ந்த படிப்புகள், நிபுணர்களின் கருத்துரை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்கள் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு மேம்படுத்தப்படும், என் றார்.

