ADDED : பிப் 16, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி அருகே உடையனம்பட்டியில் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருச்சுழி எஸ்ஐ., வீரணன், தீயணைப்பு நிலைய அலுவலர் முனீஸ்வரன் குத்து விளக்கு ஏற்றி ராணுவ வீரர்களின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தாக்குதலின் போது பணியில் இருந்த உடையனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர் மணிகண்டன் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஊராட்சி தலைவர் ஜெயமுருகன் தலைமையில் ராணுவ வீரர்களின் பெயரில் 40 மரக்கன்றுகள் நடப்பட்டன.