/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனநலம் பாதிக்கப்பட்டவர் வாறுகாலில் சடலமாக மீட்பு
/
மனநலம் பாதிக்கப்பட்டவர் வாறுகாலில் சடலமாக மீட்பு
ADDED : நவ 02, 2025 03:39 AM
விருதுநகர்: விருதுநகர் டி.சி.கே., பெரியசாமி தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட மாரியப்பன் 50, வாறுகாலில் காயங்களுடன் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். இவர் கொலை செய்யப்பட்டாரா என பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
விருதுநகர் டி.சி.கே., பெரியசாமி தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் 70. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மல்லி கோடவுன் நடத்தி வந்தார். இவரின் மகனான மாரியப்பனுக்கு, மனநலம் பாதிக்கப்பட்டதால் திருமணமாகாமல் வீட்டில் இருந்தார்.
இவர் தினசரி அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து டீக்கடை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று அதிகாலை வழக்கம் போல டீக்கடை சென்றவர் நாகேந்திரன் என்பவரின் வீட்டின் அருகே செல்லும் வாறுகாலில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
இவரின் உடலை நேற்று காலை 7:00 மணிக்கு மீட்ட போலீசார், அவரின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். இவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு வாறுகாலில் மூழ்கடிக்கப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

