/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரவு கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வணிகர்கள் எதிர்பார்ப்பு
/
இரவு கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வணிகர்கள் எதிர்பார்ப்பு
இரவு கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வணிகர்கள் எதிர்பார்ப்பு
இரவு கடைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வணிகர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 10, 2025 12:54 AM
ராஜபாளையம்: வணிக நிறுவனங்கள் அதிக வாடகை வசூலிக்கப்படுவதை சமாளிக்க கடைகளின் திறப்பு நேரத்தை 24 மணி நேரமும் திறந்து வைக்க தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராஜபாளையம் வணிகர்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்.
மாநில அளவில் அதிக சொத்து வரி விதிப்பிற்கு கீழ்வரும் முதல் மூன்று நகராட்சிகளில் ராஜபாளையம் முக்கிய இடம் பிடித்துள்ளது. அதற்கு ஏற்ப கடை உரிமையாளர்கள், வணிகம் நடத்துபவர்களிடம் வாடகையை உயர்த்தி வசூலிப்பதால் தொழில் நடத்துவதில் சிரமம் எதிர்கொள்கின்றனர்.
ஏற்கனவே பாதுகாப்பை காரணம் காட்டி இரவு 11:00 மணிக்கு மேல் கடையை அடைக்க போலீசார் கெடுபிடி விதித்து வரும் நிலையில் தமிழக அரசு இம்மாதம் ஜூன் 4 முதல் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
இருப்பினும் போலீசார் பாதுகாப்பு பற்றாக்குறையை காரணம் கூறி ராஜபாளையத்தில் இரவு 11:00 மணிக்கு மேல் அனுமதிக்க மறுப்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து பத்மநாபன்: ஏற்கனவே மாநில அளவில் உயர் வரி விகிதம் விதிக்கப்பட்டும், தொடர்ந்து மின் கட்டண உயர்வு விதிப்பு போன்றவற்றால் நிலையற்ற தன்மையை சந்தித்து வரும் சூழலில் 24 மணி நேரம் திறக்க விருப்பப்படும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தடை ஏற்படுத்த கூடாது என எதிர்பார்க்கிறோம்.