ADDED : ஜன 18, 2024 05:34 AM
விருதுநகர்: விருதுநகரில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் பின் செங்குன்றாபுரத்தில் புதியதாக அமைக்கப்பட்ட கம்பத்தில் அ.தி.மு.க., கொடி ஏற்றி வைத்து, 500 பெண்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
* சாத்துார் முக்குராந்தலில் நகரச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். சாத்துார் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம் வரவேற்றார். முன்னதாக எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர்.
சாத்துார் ஓ. மேட்டுப்பட்டி புது சூரங்குடி வெங்கடாசலபுரம் மேட்டுமலை சின்ன காமன்பட்டி பெரியகொல்லப்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது.கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கட்சியனர் பங்கேற்றனர்.
* ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஸ்டாண்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.