/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மைக் செட் உரிமையாளர் கொலை; சிறுவன் உட்பட 3 பேர் கைது
/
மைக் செட் உரிமையாளர் கொலை; சிறுவன் உட்பட 3 பேர் கைது
மைக் செட் உரிமையாளர் கொலை; சிறுவன் உட்பட 3 பேர் கைது
மைக் செட் உரிமையாளர் கொலை; சிறுவன் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூன் 17, 2025 06:49 AM

ராஜபாளையம்; ராஜபாளையம் அருகே மைக் செட் உரிமையாளர் சோலைராஜ் 33, கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி காமராஜர்புரம் பகுதியை சேர்ந்த சோலை ராஜ் . மைக் செட் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதே பகுதியில் மயானத்திற்கு செல்லும் பாலம் அருகே சோலை ராஜ் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி.,க்கள் பஸினா பீவி, ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
வடக்கு இன்ஸ்பெக்டர் அசோக் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த பெருமாள் சாமி 23, மலையடிப்பட்டியை சேர்ந்த முத்துலிங்கம் 22, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். முதல் கட்ட விசாரணையில் மது அருந்திய போது தகராறில் முன்பகை காரணமாக கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.