ADDED : ஆக 14, 2025 02:24 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் முன் விரோதத்தில் பால் வியாபாரி தர்மராஜை 22, கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த தினேஷ்பாபுவை 28, போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் மகன் தர்மராஜ் . இவர் ஆக. 10 இரவு வீடு திரும்பாததால், மகனை காணவில்லை என அவரது தந்தை எம்.புதுப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் ஆமத்துார் - லட்சுமியாபுரம் ரோட்டில் அர்ஜூனா ஆற்று பாலத்தின் அடியில் சாக்கு மூடையில் தர்மராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த தினேஷ்பாபு 28, முன்விரோதத்தில் அவரை கொலை செய்தது தெரியவந்தது. தினேஷ்பாபுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தர்மராஜின் நண்பரான கோபாலம்பட்டியை சேர்ந்த ராஜ்குமாரின் தங்கை உடன், தினேஷ்பாபு பழகி வந்துள்ளார். இதனால் ஏப்ரல் மாதம் தர்மராஜ், ராஜ்குமார் உள்ளிட்டோர் தினேஷ்பாபுவை தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து தினேஷ்பாபு புகாரின் பேரில் தர்மராஜ், ராஜ்குமார் உள்ளிட்டோர் மீது எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் இரு வருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் ஆக. 10 இரவு தர்மராஜூவை கம்பி யால் அடித்து கொலை செய்த தினேஷ்பாபு, அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி பாலத்தின் அடியில் போட்டு சென்றுள்ளார், என்றனர்.