ADDED : ஜூலை 22, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரில் நேற்று ஒற்றுமையை வலியுறுத்தி மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
காமராஜர் சிலை துவங்கி எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரி வரை மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
தொழிலதிபர் எம்.ஏ.சி.எஸ்.ரவீந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். ஜேசி மண்டல துணைத் தலைவர் வெண்மணி, இன்னர்வீல் சங்கம் மண்டல ஆலோசகர் ராஜா டி.எஸ்.பி.நாகராஜன் வாழ்த்தினார்கள். எஸ்.பி. டி. கண்ணன் போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கினார்.
மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்று வழங்கப்பட்டது. டி.எம்.பி., வங்கி மண்டல மேலாளர் கவுதமன், சன் இந்தியா பப்ளிக் பள்ளி தலைவர் பிரம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.