/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீரில் கழிவுநீர் கலக்குது வடக்கு நத்தம் மக்கள் பாதிப்பு
/
குடிநீரில் கழிவுநீர் கலக்குது வடக்கு நத்தம் மக்கள் பாதிப்பு
குடிநீரில் கழிவுநீர் கலக்குது வடக்கு நத்தம் மக்கள் பாதிப்பு
குடிநீரில் கழிவுநீர் கலக்குது வடக்கு நத்தம் மக்கள் பாதிப்பு
ADDED : அக் 19, 2025 06:03 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே வடக்குநத்தம் கிராமத்தில் ஊராட்சி வழங்கும் போர்வெல் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் காய்ச்சலில் அவதிப்படுகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது வடக்குநத்தம் ஊராட்சி . இங்குள்ள ஊருணியிலிருந்து போர்வெல் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
முறையான பராமரிப்பு இல்லாது போனதால் ஊருணியில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. 5 ஆண்டுகளாக இருப்பதால், அருகில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் கழிவுநீர் குடிநீருடன் கலந்து விடுகிறது. ஊருணியை பராமரிக்க சொல்லி பலமுறை ஊராட்சியில் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. குடிநீர் நாற்றம் எடுப்பதுடன் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் : பாதுகாப்பான சுகாதார குடிநீர் வழங்கப்படுவது இல்லை. ஊரில் பலருக்கு காய்ச்சல் வந்துள்ளது. குடிநீர் நாற்றம் எடுப்பதால் குடிக்க பயன்படுத்த முடிவதில்லை. தனியார் இடத்தில் குடிநீரை வாங்கி பயன்படுத்துகிறோம். ஊராட்சி எங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.