/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பெண்களிடம் பணம் திருட்டு
/
காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பெண்களிடம் பணம் திருட்டு
காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பெண்களிடம் பணம் திருட்டு
காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பெண்களிடம் பணம் திருட்டு
ADDED : ஆக 19, 2025 12:39 AM
காரியாபட்டி; காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பெண்களிடம் மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர். கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால், கண்டறிவதில் போலீசார் திணறி வருகின்றனர்.
காரியாபட்டி பகுதியில் சமீப நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இரவில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, டூவீலரில் தனியாக செல்பவர்களை கண்காணித்து வழிப்பறியில் ஈடுபடுவது, டூ வீலர் திருட்டு என தொடர்கதையாக இருந்து வருகிறது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தவேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
நேற்று மதியம் பஸ்சுக்காக காத்திருந்த இரு பெண்களிடம், பையில் வைத்திருந்த மணி பர்ஸை இருவர் நூதனமாக திருடி, தப்பிச் சென்றனர். ஒரு பர்ஸில் ரூ. 2 ஆயிரத்து 500ம், மற்றொன்றில் ரூ. ஆயிரத்து 600ம் இருந்துள்ளது. இதுகுறித்து காரியாபட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, ஒரு கேமரா மட்டுமே வேலை செய்தது. மற்ற கேமராக்கள் வேலை செய்யாததால் மர்ம நபர்களை கண்டுபிடிப்பதில் , திணறி வருகின்றனர். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்துவதோடு, வேலை செய்யாத கேமராக்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

