/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாயுமானவர் திட்ட ரேஷன் வினியோகத்தில் அவசியமாகுது கண்காணிப்பு: கிராமங்களில் வசிக்கும் முதியோர் திண்டாட்டம்

ADDED : அக் 21, 2025 03:17 AM

தமிழகத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளி ரேஷன் கார்டு தாரர்களின் வீட்டிற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் “முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை” ஆகஸ்ட் மாதம் துவங்கி வைக்கப்பட்டது.
இதன் படி குறிப்பிட்ட ரேஷன் கடை எண்ணுக்குள் இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளின் பட்டியல் கூட்டுறவுத்துறை மூலம் வழங்கப்படும். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேதியை குறிப்பிட்டு ரேஷன் கடை விற்பனையாளர் வீட்டிற்கு சென்று வழங்குவார்.
ஆனால் ஒரு சில ரேஷன் கடைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. இரண்டு கடைகளை ஒரே ஊழியர் பார்க்கும் நிலை உள்ளது. இதனால் தாயுமானவர் திட்டத்தை முழுமையாக செயல் படுத்த முடிவதில்லை. ஒரு சில முதியவர்கள் வெளி யூரிலுள்ள தங்கள் பிள்ளைகள் வீட்டிற்கு சென்று விட்டால் அதுவும் சிரமத்திற்கு வழிவகுக்கும்.
இந்நிலையில் அக். 2வது வாரம் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் சங்கத்தினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
பருவமழையை முன்னிட்டு நவ. மாத பொருட்களை, இப்போதே வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்த பின் பில்லிங் செய்வதில் அக். 18ல் கோளாறு ஏற்பட்டது. மதியம் வரை வேறு வழியின்றி மேனுவல் பில் போட்டு பொருட்கள் வழங்கினர். ஆனால் பாதி பேர் பொருட்கள் வாங்காமல் திரும்பிவிட்டனர்.
இது போன்ற சிக்கல் களால் பல முதியவர்களுக்கு தாயுமானவர் திட்டத்தில் பொருட்கள் வழங்க தாமதம் ஏற்பட்டு உள்ளது. மழை நேரத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், நவ. மாத பொருட்களையும் சேர்த்து இம்மாதமே அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே கூட்டுறவுத்துறை இதில் தீவிரம் காட்டி இம்மாதம் அனைவருக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு கண் காணிப்பும் அவசியம்.