/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மா, தென்னை தோப்புகளில் குரங்குகள் அட்டகாசம்
/
மா, தென்னை தோப்புகளில் குரங்குகள் அட்டகாசம்
ADDED : ஏப் 28, 2025 05:26 AM

சேத்துார்: ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கல்லணை ஓடை பகுதியில் முகாமிட்டுள்ள குரங்குகள் மாங்காய், தேங்காய்களை சேதப்படுத்துவதால் தோப்பு குத்தகை எடுத்த விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவியாறு, நகரியாறு, பிராவடியாறு அய்யனார் கோயில் ஆற்று படுகையில் மா, தென்னை சாகுபடி 8 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி நடக்கிறது. தற்போது சீசன் உச்சத்தை தொடங்கியுள்ள நிலையில் தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிராவடி ஆறு கல்லணை ஓடை இணையும் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 15ற்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டு மாங்காய், இளநீர் உள்ளிட்ட விளை பொருட்களை பறித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் தளவாய்புரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம், முகவூர் மனோகரன் பரமசிவம், அழகுமலை, காளியப்பன், கிருஷ்ணாபுரம் ராதாகிருஷ்ணன் ராஜபாளையத்தை சேர்ந்த பூபதி ராஜா, மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன், சேத்துார் குட்டி ஆகியோரின் 40 ஏக்கர் பரப்பளவு தோப்புகளில் விளை பொருட்களை சேதம் ஏற்படுத்துகிறது.
இது குறித்து விவசாயி ராதாகிருஷ்ணன்: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தோ வந்த குரங்குகள் தற்போது தேவதானம் கல்லணை ஓடை பகுதியை தங்களது வசிப்பிடமாக மாற்றி உள்ளது. இப்பகுதியில் உள்ள கோயிலில் வழங்கும் இலவச உணவு காரணமாக நிரந்த இருப்பிடமாக மாற்றி உள்ளதுடன் மாந்தோப்புகளில் மாம்பழங்கள், இளநீர், தேங்காய்களை பறித்தும் சேதம் ஏற்படுத்துவதுடன், இரவு நேரம் இங்குள்ள மூங்கில் மரங்களில் இடையே பதுங்குகிறது.