ADDED : ஆக 08, 2026 06:22 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: மத்திய அரசு லோக்சபாவில் தாக்கல் செய்துள்ள வி.பி.எஸ்.ஏ., மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மூட்டா சார்பில் விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இங்கும் நடந்தது. கிளைத் தலைவர் பேராசிரியர் அனுசுயா தேவி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் ஸ்ரீராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
மண்டல துணைத் தலைவர் சுப்புராஜ் துவங்கி வைத்தார். கோரிக்கைகள் குறித்து மூட்டா தலைவர் பெரியசாமி ராஜா பேசினார். கிளைப் பொருளாளர் பாரதி நன்றி கூறினார்.
