ADDED : ஆக 08, 2026 05:54 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகை கொள்ளை வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி ஐயப்பன் காலனி 5 வது தெருவை சேர்ந்தவர் அரவிந்த்ராம் 40. இவர் ஜூலை 4ல் இரவு 8:00 மணியளவில் குடும்பத்தினருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்று விட்டு இரவு 11:30 மணியளவில் வீடு திரும்பியபோது முகமூடி அணிந்த 5 மர்ம நபர்கள் 75 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் கொள்ளையடித்து கத்தியை காட்டி மிரட்டி காரில் ஏறி தப்பினர்.
கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக துாத்துக்குடியை சேர்ந்த பேச்சிமுத்து 21, சோமசுந்தர் 24, பிருத்திவிராஜன் 28, மனோஜ் குமார் 24, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருச்சியைச் சேர்ந்த பிரசாந்த் 30 ,ஆகியோரை கைது செய்த போலீசார் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் பள்ளிக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த சுபாஷ் 29, சேரன்மகாதேவியை சேர்ந்த ராஜகோபால் 27, ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
