/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலானோர் காத்திருப்பு! சிறு காரணங்களுக்கும் அலைக்கழிப்பதால் திண்டாட்டம்

ADDED : அக் 19, 2025 09:39 PM
மாவட்டத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. புதிதாக ரேஷன் கார்டுக்கு மாதம் சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர். இந்த நாட்டின் குடிமகனாக இருக்க ரேஷன் கார்டு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்தது.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பின் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். சிலிண்டர் வைத்திருக்கிறார்களா என விசாரிக்கின்றனர்.
தனியார் ஏஜென்சியில் சிலிண்டர் பெற ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செல வாகிறது. வசதி குறைவால் சிலர் பெற முடியாமல் உள்ளனர். புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது, சிலிண்டர் இல்லாததை குறையாக கூறி விண்ணப்பங்களை நிராகரிக்கின்றனர்.
திருமணமாகி, பெற்றோர் ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கி விட்டாலே, புது ரேஷன் கார்டு பெற தகுதி உள்ளது. அப்படி இருக்கும் போது, வீட்டு வரி ரசீது, சிலிண்டர் இருக்கிறதா என கேட்கின்றனர். ரசீது அத்துடன் வாடகை ஒப்பந்தம் கேட்கின்றனர். சிலர் பயந்து கொண்டு ஒப்பந்தம் தர மறுக்கின்றனர். பின் எப்படித்தான் ரேஷன் கார்டு பெறுவது என வேதனை அடைகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப் பித்து விடக்கூடாது என்பதற்காகவும் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவ தாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் ஏற்கப்படும் ஒரு சில விண்ணப்பங்களுக்கு 6 மாதம் முதல் ஒரு ஆண்டு வரை காத்திருக்கின்றனர். சான்றுகள், சலுகைகள், கடன், வாகனங்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். விண்ணப்பிப்பவர்கள் கேள்வி கேட்டால் அதிகாரிகள் முறையாக பதில் கூறாமல் அலட்சியப் படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறைகளை கூறி நிரா கரிப்பதை தவிர்த்து, முறையாக ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.