ADDED : ஏப் 15, 2026 11:30 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவம் முடிந்து குழந்தைகளுடன் வீடுகளுக்கு திரும்புவதற்காக இலவச தாய், சேய் ஒன்று ஊர்தி செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த போது வழங்கப்பட்ட ஒரு இலவச தாய், சேய் ஊர்தி மட்டுமே மருத்துவக்கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது.
திறக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை கூடுதல் வாகனங்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஒரு முறை பெற்றோர், குழந்தையை இறக்கி விட சென்று விட்டால் திரும்ப வாகனம் வரும் வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் வாகனத்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
