/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் தாய், மகன் தற்கொலை
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் தாய், மகன் தற்கொலை
ADDED : அக் 26, 2024 07:15 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தாய் கோவிந்தம்மாளும், 34 வயதாகியும் திருமணமாகாததால் மகன் சரவணமூர்த்தியும் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே காரங்குளத்தைச் சேர்ந்தவர் சீனி ராஜ். இவரது மனைவி கோவிந்தம்மாள் 58. இத்தம்பதிக்கு மாற்றுத்திறனாளியான ஒரு மகளும், சரவணமூர்த்தி என்ற மகனும் இருந்தனர்.
இதில் சிறுவயதிலேயே மாற்றுத்திறனாளி மகள் உயிரிழந்தார். 10 ஆண்டுகளுக்கு முன் சீனிராஜும் உயிரிழந்தார். இதனால் தனது 82 வயது தாய் வீரம்மாளுடன் கோவிந்தம்மாள் ,மகன் சரவணமூர்த்தியுடன் காரங்குளத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
இதில் கோவிந்தம்மாள் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டும், மகன் சரவணமூர்த்தி 34 வயதாகியும் திருமணமாகாமல் எந்த வேலைக்கும் போகாமலும் விரக்தி மனநிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு வீரம்மாள் அறிவுரை கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 8:30 மணிக்கு வீரம்மாள் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டில் மகள் கோவிந்தம்மாளும், பேரன் சரவண மூர்த்தியும் தனித்தனியாக சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.