/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
10 மாத குழந்தையுடன் தாய் தற்கொலை
/
10 மாத குழந்தையுடன் தாய் தற்கொலை
ADDED : பிப் 15, 2024 02:50 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கணவன் அழைத்துச் செல்லாததால் ஜக்கம்மாள் காலனியைச் சேர்ந்த சுபலட்சுமி 25, தனது 10 மாத குழந்தை மகிஷாவுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி ஆலமரத்துப்பட்டி ஜக்கம்மாள் காலனியை சேர்ந்தவர் சுபலட்சுமி. இவருக்கும் கன்னி சேரி குமாரபுரத்தைச் சேர்ந்த மகேஷ் குமாருக்கும் 27, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 மாத குழந்தை மகிஷா உள்ளது.
பிரவசத்திற்கு தாயார் வீட்டிற்கு வந்து 10 மாதமாகியும் மகேஷ் குமார் அவர்களை அழைத்துச் செல்லவில்லை. இதனால் சுபலட்சுமி நேற்று முன் தினம் இரவு 8:00 மணிக்கு தனது குழந்தைக்கு துாக்கிட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விஸ்வநாதனும் விசாரிக்கிறார்.

