/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணி முடியும் முன்பே வழிகாட்டி பலகைl அலைக்கழிக்கப்படும் வாகன ஓட்டிகள்
/
பணி முடியும் முன்பே வழிகாட்டி பலகைl அலைக்கழிக்கப்படும் வாகன ஓட்டிகள்
பணி முடியும் முன்பே வழிகாட்டி பலகைl அலைக்கழிக்கப்படும் வாகன ஓட்டிகள்
பணி முடியும் முன்பே வழிகாட்டி பலகைl அலைக்கழிக்கப்படும் வாகன ஓட்டிகள்
ADDED : பிப் 05, 2025 11:59 PM

ராஜபாளையம்; ராஜபாளையத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையடையாத நிலையில், சங்கரன்கோவில் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு பலகை வாகன ஓட்டிகளை அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது.
திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சத்திரப்பட்டி வழியே ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்து முதுகுடி வழியாக மேம்பாலம் மூலம் இப்பாதை கடந்து செல்கிறது.
இந்நிலையில் முதுகுடி முன்பு ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால் பணிகள் முடிவடையாமல் உள்ள நிலையில் ராஜபாளையம் மெயின் ரோட்டில் ஸ்ரீவில்லிபுத்துார், தென்காசி என குறியீட்டுடன் கூடிய பெயர் பலகை அமைக்கப்பட்டு விட்டது.
இதனால் இவ்வழியே வரும் வாகனங்கள் வழிகாட்டி பலகையைப் பார்த்து மேம்பாலத்தில் ஏறி நான்கு வழிச்சாலை மூலம் சுலபமாக கடந்து விடலாம் என செல்லும்போது நீண்ட துாரம் வரை சென்று திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அலைக்கழிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இரவு நேரங்களில் இதனால் வேகம் எடுக்கும் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்படுவதால் பணிகள் முடியும் வரை பெயர் பலகை குறியீட்டை மாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.