/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடிந்து விழும் நிலையில் பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
இடிந்து விழும் நிலையில் பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
இடிந்து விழும் நிலையில் பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
இடிந்து விழும் நிலையில் பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 07, 2024 04:48 AM

சிவகாசி: சிவகாசி கிழக்கு மயான சாலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி காந்தி ரோடு கிழக்கு மயான சாலை பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள், அச்சு தொழில் நிறுவனங்கள் உள்ளன. எனவே இப்பகுதியில் அதிகளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் கிழக்கு மயான சாலையில் உள்ள ஓடையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது பாலம் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பாலத்தின் தடுப்புச் சுவரும் இடிந்து விழுந்து விட்டது. பாலம் சேதத்தால் அதிக லோடு ஏற்றி வருகின்ற வாகனங்கள் அச்சத்துடனே வரவேண்டியுள்ளது. மிகவும் குறுகியதாக உள்ள பாலத்தில் தடுப்பு சுவரும் இல்லாததால் டூவீலரில் செல்பவர்கள் ஓடையில் அடிக்கடி விழுகின்றனர். எனவே சேதமடைந்த பாலத்தை அகற்றி புதிதாக பெரிய பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

