/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தடுப்புச்சுவர் இல்லாத பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
தடுப்புச்சுவர் இல்லாத பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மார் 03, 2024 05:42 AM
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமல நாச்சியார் புரத்திலிருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் திருத்தங்கல் ரோட்டில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.
தரைப்பாலமாக இருந்தாலும் இரு புறமும் ஓடை செல்வதால் பள்ளமாக உள்ளது. இந்நிலையில் தரைப்பாலத்தில் இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லை. இதன் வழியே பள்ளி ,கல்லுாரி பஸ்கள் பட்டாசு ஆலை பஸ்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.
ஏனெனில் வாகனங்கள் சற்று கவனம் சிதறி கவிழ்ந்தாலும் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இரவில் டூவீலர்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
தவிர இந்த இடத்தில் தெருவிளக்குகளும் இல்லை. எனவே இங்கு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்

