/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டுப்போன மரங்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
/
பட்டுப்போன மரங்களால் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : பிப் 07, 2024 12:22 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் நகர், புறநகர், ஊரகப்பகுதிகளின் ரோடுகளில் இருபக்கமும் உள்ள மரங்களில் பட்டுபோன மரங்கள் சரிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் என வாகன ஒட்டிகள் அச்சப்படுகினறனர்.
மாவட்டத்தில் மரங்களை எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் தங்கள் எல்லைக்குள் இருக்கும் ரோடுகளின் இருபுறமும் புதியதாக மரங்களை நடவு செய்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் - அழாகபுரி ரோட்டின் இருபுறமும் உள்ள மரங்கள் நன்கு வளர்ந்து காணப்படுகிறது. இதே ரோட்டில் சில பழமையான பட்டுபோன மரங்களும் உள்ளது. இவை வெயில் காலத்தில் தாக்குபிடிக்க முடியாமல் சரிந்து விழுந்து விடும். அவ்வழியே செல்லும் வாகனங்கள் மீது விழுந்து விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படும். இது போன்ற பட்டுபோன மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மரங்களின் நிழலில் வாகனங்களில் செல்வதற்கு நன்றாக இருந்தாலும் பட்டுபோன மரங்களால் அச்சுத்துடன் செல்ல வேண்டியுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே ரோட்டின் இருபுறமும் உள்ள பட்டுபோன மரங்களை அகற்றிவிட்டு புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

