/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கவுசிகா நதியில் குப்பை எரிப்புபுகைமூட்டத்தில் வாகன ஓட்டிகள்
/
கவுசிகா நதியில் குப்பை எரிப்புபுகைமூட்டத்தில் வாகன ஓட்டிகள்
கவுசிகா நதியில் குப்பை எரிப்புபுகைமூட்டத்தில் வாகன ஓட்டிகள்
கவுசிகா நதியில் குப்பை எரிப்புபுகைமூட்டத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 14, 2024 04:46 AM

விருதுநகர் : விருதுநகர் கவுசிகா நதியில் குப்பை எரிக்கப்படுவதால் புகைமூட்டத்தில் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளில் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.
விருதுநகர் கவுசிகா நதியை யொட்டி குப்பை குவிவது தொடர்கதையாக இருந்து வருகிறது. விருதுநகர் பாத்திமா நகர் அருகிலும், ஆத்துப்பாலம் அருகிலும் அதிகளவில் குப்பை கொட்டப்படுகிறது. இரவோடு இரவாக ஆலை குப்பை, மெத்தை, படுக்கை விரிப்புகள் போன்றவற்றை கொட்டி செல்கின்றனர். ஊரக பகுதி மக்களும் அதிகம் குப்பை கொட்டுகின்றனர். இதை மர்ம நபர்கள் சிலர் அவ்வப்போது தீ வைத்து விடுகின்றனர்.
இதனால் இவ்வழியை கடக்கும் மக்கள் கடந்த சிரமத்தை சந்திக்கின்றனர். பெரும்பாலும் இதில் எளிதில் தீப்பற்றக்கூடிய பாலிதீன் குப்பை அதிகளவில் உள்ளதால் அவை எரிக்கப்படும் போது காற்று மாசு அதிகமாகிறது. மேலும் புகையையும் அதிகளவில் வெளியேற்றுவதால் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் இருமல், சுவாச கோளாறுகளுக்கு ஆட்படுகின்றனர். ஆகவே குப்பை எரிப்பதை நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.