/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டை-இருக்கன்குடி ரோடு பள்ளமானதால் சிரமத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : ஜன 04, 2025 03:31 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை -இருக்கன்குடி ரோடு சேதமடைந்து பள்ளமாக மாறிவிட்டவதால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் இருந்து சுக்கில நத்தம், வெள்ளையாபுரம், ஆமணக்கு நத்தம், ஏ.கல்லுப்பட்டி வழியாக இருக்கன்குடி கோயிலுக்கு செல்ல ரோடு உள்ளது.
பயண தூரம் குறைவாகவும் விரைவாகவும் செல்ல முடியும் என்பதால் அருப்புக்கோட்டை சுற்று பகுதிமக்கள் செவ்வாய், புதன், விசேஷ நாட்களில் இந்த ரோட்டை பயன்படுத்துவர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இதன் வழியாக செல்வர்.
10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் இந்த ரோடு வழியாக அருப்புக்கோட்டைக்கு படிக்க செல்வர்.
இந்த ரோடு ஒரு வழி பாதையாக இருந்ததை 10 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. அதிக போக்குவரத்து, கனரக வாகனங்கள், அதிக எடையுள்ள கற்களை ஏற்றி செல்லும் லாரிகள் இந்த ரோடு வழியாகச் சென்றதால் ரோடு சேதம் அடைந்து விட்டது. 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் புதியதாக ரோடு அமைக்க எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
ரோட்டின் பெரும்பாலான பகுதிகள் பள்ளமாக இருப்பதால் டூவீலர்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.