/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் --- மதுரை ரோட்டில் பேரிகாடால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி
/
விருதுநகர் --- மதுரை ரோட்டில் பேரிகாடால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி
விருதுநகர் --- மதுரை ரோட்டில் பேரிகாடால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி
விருதுநகர் --- மதுரை ரோட்டில் பேரிகாடால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 02, 2025 12:28 AM
விருதுநகர்: விருதுநகர் -- மதுரை ரோடு நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் இணையும் இடத்தில் மேற்கு போலீஸ் அவுட் போஸ்ட் அருகே பேரிகாடு வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகரில் இருந்து மதுரை செல்லும் ரோடு நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோட்டில் இணையும் இடத்தில் மேற்கு போலீஸ் அவுட் போஸ்ட் உள்ளது.
இதன் அருகே போலீசார் நின்று காலை, மாலை நேரங்களில் டூவீலரில் ஹெல்மட் அணியாதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கின்றனர்.
ஆனால் விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தின் சர்வீஸ் ரோடு வழியாக வரும் பஸ்கள், கனரக வாகனங்கள், லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்பவர்கள் போலீஸ் அவுட் போஸ்ட் ரோட்டை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
இப்பகுதி காலை முதல் இரவு வரை எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக இருந்தும் வாகனங்கள் சீராக செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் போலீசார் பேரிகாடு அமைத்துள்ளனர்.
இதனால் குழந்தையை அழைத்து செல்பவர்கள், சைக்கிளில் செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனைக்கு சிகிச்கைக்காக செல்பவர்கள் தொடர்ந்து ரோட்டில் முன்னேற முடியாமல் நெரிசலால் பரிதவித்து வருகின்றனர்.
கட்டாயம் ஹெல்மட் அணிந்து தான் டூவீலர் ஓட்ட வேண்டும். ஆனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி போலீசார் சோதனை செய்வது சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே விருதுநகரில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் மேற்கு போலீஸ் அவுட் போஸ்ட் அருகே ரோட்டை மறித்து வைக்கப்பட்டுள்ள பேரிகாடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

