/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் வீதிகளில் உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
/
சாத்துாரில் வீதிகளில் உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
சாத்துாரில் வீதிகளில் உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
சாத்துாரில் வீதிகளில் உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஆக 03, 2025 05:01 AM
சாத்துார்: சாத்துார் நகரில் வீதியில் உலா வரும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்துார் மெயின்ரோட்டில் அரசு , தனியார் மருத்துவமனைகள், பொதுப்பணித்துறை அலுவலகம் தாலுகா அலுவலகம், வங்கிகள் என பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக மெயின் ரோடு உள்ளது. மேலும் இந்த பகுதியில் சாலை ஓர கடைகள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியினர் வளர்க்கும் மாடுகள் அதிக அளவில் மெயின் ரோட்டில் உலா வருகின்றன.
இந்த மாடுகள் சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பெட்டிக் கடைகளில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழம் ,உள்ளிட்ட பழங்களை திடீரென கடித்து தின்பதோடு கடைக்காரர்கள் விரட்டும் போது அவை ஓட்டம் பிடித்து ரோட்டில் ஓடுகின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கால்நடைகள் திடீரென மிரண்டு ஓடி வருவதால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விபத்துக்கள் ஏற்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் நகர் பகுதிக்குள் கால்நடைகள் உலா வருவதற்கு தடைவிதித்து உள்ளது. மீறி கால்நடைகள் உலா வந்தால் அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இருந்த போதும் நகரில் கால்நடைகள் உலா வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடைக்காரர்களும் பாதசாரிகளும் கால்நடைகளால் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் நகருக்குள் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.