/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குறுநில மன்னர்கள் போன்ற இயக்கம் தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேச்சு

ADDED : அக் 21, 2024 04:30 AM
சிவகாசி: குறுநில மன்னர்கள் போன்ற இயக்கம் தி.மு.க., என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கேள்வி எழுப்பினார்.
சிவகாசி அருகே நாரணாபுரத்தில் அ.தி.மு.க.. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அவர் பேசியதாவது: குறுநில மன்னர்கள் போன்ற இயக்கம் தி.மு.க. நம் கட்சி தொண்டர்கள் வழி மாறாமல் தடம் மாறாமல் இருந்தால் வரும் காலம் அ.தி.மு.க.,வுக்கு வசந்த காலம். தி.மு.க.. ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு போடப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் என்ன கொலை செய்தாரோ கொள்ளையடித்தாரா. முதல்வர் ஸ்டாலினை குற்றாலத்திற்கு குளிக்க கூப்பிட்டதற்கு தண்டனையா. அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கு தி.மு.க., ரிப்பன் வெட்டி கொண்டிருக்கிறது, என்றார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, ஏமாற்றி பித்தலாட்ட வேலை செய்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் கட்சி தி.மு.க. பிரதமர் மோடியை பார்த்தால் தி.மு.க., எம்.பி.,க்கள் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுகின்றனர். நாங்கள் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் நேரடியாக இருப்போம். இனவாத, மொழிவாத, மதவாதம் இல்லாத ஆட்சி தருவதாக இருந்தால் அ.தி.மு.க., ஆதரிக்கும் இல்லாவிட்டால் எதிர்க்கும், என்றார்.