/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கவர்னர் பதவி விலகவேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கு
/
கவர்னர் பதவி விலகவேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கு
கவர்னர் பதவி விலகவேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கு
கவர்னர் பதவி விலகவேண்டும் எம்.பி., மாணிக்கம் தாகூர் தாக்கு
ADDED : ஏப் 22, 2025 05:33 AM
விருதுநகர்: ''கவர்னர் ரவி பதவி விலக வேண்டும்'' என விருதுநகரில் ரூ.68 கோடியில் பாலம், நடைபாதை உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார்.
விருதுநகரில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை பலர் கவர்னராக இருந்துள்ளனர். அப்போது வராத பிரச்னை தற்போது வருவதற்கு, கவர்னர் ரவி பா.ஜ.,வின் மாநிலத் தலைவர் போல் செயல்படுவது தான் காரணம்.
மாநிலத்தில் நடப்பதை மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கும் பணியை மட்டுமே கவர்னர் செய்ய வேண்டுமே தவிர நாட்டாமை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் தான் தபால்காரர்' என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.
உச்சநீதிமன்றம் கவர்னர் ரவிக்கு சரியான அடி கொடுத்துள்ளது. மானம், ரோஷம் இருந்தால் அவர் பதவி விலக வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டார். இல்லாத பிரச்னையை பேசுவதற்காக பா.ஜ., முயற்சி செய்கிறது. தமிழகத்தில் பா.ஜ., எக்காலத்திலும் மலராது, என்றார்.