/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., கூட்டணிக்கும், த.வெ.க., வுக்கும் போட்டி எம்.பி., மாணிக்கம் தாகூர் கணிப்பு

ADDED : ஜூலை 06, 2025 03:26 AM
விருதுநகர்: தமிழகத்தில் பா.ஜ.,விற்கு எதிரான மனநிலை இருப்பதால் தி.மு.க., கூட்டணிக்கும் த.வெ.க., விற்குமான போட்டியாக மாறும் என விருதுநகரில் எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
த.வெ.க., தலைவர் விஜய், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என தெரிவித்திருப்பது மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கான பதில். த.வெ.க., யாருடனும் கூட்டணி இல்லை என்றால் தமிழகத்தில் பா.ஜ.,விற்கு எதிரான மனநிலை இருப்பதால் அ.தி.மு.க., இல்லாமல் போய்விடும். அப்போது தி.மு.க., கூட்டணிக்கும் த.வெ.க., விற்குமான தேர்தல் போட்டியாக அமையும்.
ஸ்டேட் வங்கியை சிறு முதலீட்டாளர்களின் நிதியை எடுத்து பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கும் நிறுவனமாக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா ஆகியோர் செயல்படுத்தி வருகின்றனர்.
பெரும் பணக்காரர்கள் வாங்கிய கடனை செலுத்த முடியாவிட்டால் மொத்த தொகையில் 10 சதவீதம் மட்டும் திரும்ப செலுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் வங்கியின் நிதிநிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது.  மத்திய அரசின் இந்த பாலிசியை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்தியர்கள் ஒவ்வொருவர் மீதும் தலா ரூ. 4 லட்சம் கடன் உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து மாநில முதல்வர், மத்திய நிதி அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை. இது குறித்து காங்., சார்பில் லோக்சபாவில் கேள்வி எழுப்பப்படும், என்றார்.