/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேம்பால பணிகளுக்கு மாநில அரசு அதிக நிதி வழங்குகிறது எம்.பி., மாணிக்கம் தாகூர் பேச்சு

ADDED : பிப் 25, 2024 06:15 AM
விருதுநகர் : தமிழகத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் மேம்பாலப் பணிகளுக்கு மத்திய அரசை விட மாநில அரசு அதிக நிதி வழங்குகிறது என எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
தமிழகம் வரும் பிரதமர் மோடி திருமங்கலம், திருத்தங்கல், சாட்சியாபுரத்தில் மேம்பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த மேம்பால பணிகளுக்காக மத்திய அரசு நிதியை விட மாநில அரசு அதிக நிதி வழங்குகிறது.
பா.ஜ., ஆட்சி அமைத்த மாநிலங்களில் பூரண மது விலக்கு அமல்படுத்தாமல் தமிழகத்தில் ஆட்சி அமைந்ததும் பூரண மது விலக்கு அமல்படுத்துவோம் என பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணமாமலை கூறுவது தவறு. பா.ஜ., 40 தொகுதிகளை வென்றால் அரசியலை விட்டு வெளியேறி விடுகிறேன்.
பா.ஜ., வெற்றி பெற முடியவில்லை என்றால் மத்திய அமைச்சர் முருகன் அரசியலை விட்டு வெளியேற தாயரா. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மதுரை எய்ம்ஸ், டெக்ஸ்டைல் பார்க், திருத்தங்கல், சாட்சியாபுரம், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்படும். என்றார்.